News August 31, 2025
சேலம் வழியாக குஜராத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

வரும் செப்.01- ஆம் தேதி சேலம் வழியாக விழுப்புரத்தில் இருந்து குஜராத் மாநிலம், உத்னாவுக்கு சிறப்பு ரயில் (06159) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
சேலம்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் செப்டம்பர்-1 இன்றைய முக்கிய நிகழ்வுகள்;
▶️காலை 9:30 மணி இந்திய மருத்துவ சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் சங்க கட்டிட வளாகம்.
▶️காலை 10 மணி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.
▶️ மாலை 4 மணி பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️மாலை 6 மணி சின்ன கடைவீதி ராஜகணபதி கோயிலில் சிறப்பு பூஜை சாமி ஊர்வலம்.
News September 1, 2025
சேலம் மாவட்டத்தில் 17 இடங்களில் உழவர் நல சேவை மையம்!

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 17 இடங்களில் உழவர் நல சேவை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். https://www.tnagrisnet.tn.gov.in/ மானிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
News September 1, 2025
தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் மாவட்ட அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வெளிமுகமை நிறுவனங்கள் உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை செப்.10 மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, 4-வது தளம், ஆட்சியர் அலுவலகம், சேலம்-636001 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.