News April 9, 2024

கள்ளக்குறிச்சி: நகராட்சி வரி விதிப்பு சலுகை

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் சொத்து வரி பாக்கியை செலுத்தாதவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் செலுத்தப்படும் தொகையில் 5 சதவீதம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு சொத்து வரி பாக்கியை செலுத்தி சலுகைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என நகராட்சி செயல்கள் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News March 22, 2026

கள்ளக்குறிச்சி யாருக்கு?

image

கள்ளக்குறிச்சி தொகுதியில் 2011ம் ஆண்டு முதல் நடந்த 3 தேர்தலில் அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியை, இந்தமுறை பிடித்தே ஆக வேண்டும் என திமுக தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனேவே பொதுக்கூட்ட மேடைகளில் திமுக சவால் விடுவதும், அதிமுக சவாலை ஏற்பதும் என பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. நீங்க சொல்லுங்க கள்ளக்குறிச்சி யாருக்கு?

News March 22, 2026

கள்ளக்குறிச்சியில் பரிதாப பலி!

image

கள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் சின்னவண்டு (73). நேற்று இவர் தனது சைக்கிளில் உலகங்காத்தான் கை காட்டி பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பைக், இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2026

கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!