News August 30, 2025
USA-ன் 50% வரி: PM மோடிக்கு EPS கடிதம்

USA-ன் 50% வரியால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் கோரி PM மோடிக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். ஏற்றுமதி இழப்பை சமாளிக்க இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பருத்தி நூலின் வரியில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உற்பத்தியாளர்களின் நிலுவையில் உள்ள கடன்களுக்கு வட்டியில் தளர்வு அளிக்கவும் கோரியுள்ளார்.
Similar News
News September 1, 2025
மீண்டும் ‘மீசைய முறுக்கும்’ ஹிப் ஹாப் ஆதி

2017-ல் சூப்பர் ஹிட்டான ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. ஹிப் ஹாப் ஆதி இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. இப்படம் வசூல் ரீதியாக பெற்ற வெற்றியை தொடர்ந்து பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோ ஆக ‘அன்பறிவு’, ‘வீரன்’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சுந்தர்.சி இப்படத்தை தயாரிக்கிறார்.
News September 1, 2025
அதிமுக கூட்டணியில் பாமக? வெளியான தகவல்

அதிமுக கூட்டணியில் பாமக இணையவிருப்பதாக, கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS பேசியிருந்தார். இதுகுறித்து ராமதாஸுக்கு நெருக்கமானவரும், பாமக MLA-வுமான அருள் விளக்கம் அளித்துள்ளார். அதில், கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அவர் அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக- பாமக கூட்டணி இயற்கையானது என ராமதாஸ் ஏற்கெனவே கூறியிருந்தார்.
News September 1, 2025
உலகத்தை ஆட்டி படைப்பவர்கள் எந்த வயதினர் தெரியுமா?

இன்றைய உலகம் இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் இந்த உலகத்தை ஆட்டிப் படைப்பவர்கள் எல்லாம் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் என்றால் நம்பமுடிகிறதா? ஆம், இந்திய PM மோடிக்கு 74 வயது, ரஷ்ய அதிபர் புடினுக்கு 72 வயது, டிரம்புக்கு 79 வயது, ஜி ஜின்பிங்கிற்கு 72 வயது. இப்போது சொல்லுங்க, சாதிப்பதற்கு வயது ஒரு தடையா?