News August 30, 2025

இந்த விஷயங்களை செய்தால் உங்களிடமும் பணம் குவியும்

image

முதலீட்டில் ஜாம்பவானாக அறியப்படுபவர் வாரன் பஃபெட். சிறுவயதிலிருந்தே முதலீடுகளை செய்து பணக்காரர் ஆனவர் இவர். முதலீடுகளை செய்ய தனக்கென சில நிதி கொள்கைகளை வைத்துள்ளார். அதை செய்தால் உங்களிடமும் பணம் கொட்டுமாம். ▶அளவுக்கு அதிக கடன்களை வாங்காதீர்கள் ▶தேவையற்ற செலவுகள் தவிர்க்கவும் ▶சரியான முதலீட்டை தேர்வு செய்வது அவசியம் ▶அவசர கால நிதியை வைத்துக்கொள்ளுங்கள் என வாரன் பஃபெட் கூறுகிறார்.

Similar News

News September 1, 2025

BJP கட்டுப்பாட்டில் EC: திருமா

image

தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டிலும் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என சந்தேகத்தை எழுப்பிய அவர், 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சம் என்றும் சாடினார். மேலும், திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் தான் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News September 1, 2025

TTV தினகரனுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

TTV தினகரன் NDA கூட்டணியில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024 தேர்தலில் இருந்தே தங்களுடன்(NDA) பயணிக்கும் அவர், எங்களுடன் தான் இருக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றார். முன்னதாக NDA கூட்டணியில் AMMK இருக்கிறதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என <<17579258>>டிடிவி தினகரன்<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News September 1, 2025

13,217 பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்

image

RRB எனப்படும் பிராந்திய ஊரக வங்கிகளில் 13,217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு IBPS அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் 21-ம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வி: பட்டம், எல்எல்பி, டிப்ளமோ, சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம் முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். முழு விவரங்களுக்கு www.ibps.in-ஐ பார்வையிடவும்.

error: Content is protected !!