News August 30, 2025

சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா

image

ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, படத்தின் போஸ்டர்களில் கூட போட்டோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார். ‘சந்திரமுகி’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட வெற்றி படங்களில் அவரது போட்டோ போஸ்டர்களில் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி, வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறக்க வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

1,543 பணியிடங்கள்.. இப்பவே அப்ளை பண்ணுங்க..

image

பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்ற 29 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கள பொறியாளருக்கு மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளமும், கள மேற்பார்வையாளர்களுக்கு ₹23,000 – ₹1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். செப்., 17-க்குள் https://www.powergrid.in/en/job-opportunities -ல் விண்ணப்பியுங்கள்.

News September 1, 2025

CM வெளிநாட்டு பயணத்தால் பயன் இல்லை: ஜி.கே.வாசன்

image

பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் எந்த பயனும் தராது என்று ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டது என்று சாடிய அவர், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மக்கள் கொடுத்த மனுக்களை வைகை ஆற்றில் போட்டதன் மூலம், இத்திட்டத்தின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது என்று விமர்சித்தார்.

News September 1, 2025

சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்: IMD வார்னிங்

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(செப்.1) 40 – 60 KM வேகத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்கு காற்று வீசும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!