News August 30, 2025
BREAKING-திருவள்ளூர் எம்.பி மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 1, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு.

தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருவோரை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் Dr. அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது, தமிழக அரசு வழங்கி வருகிறது. அவ்வகையில் 2025 ஆண்டிற்கான விருது பெற விரும்புவோர் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர்(ம) பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று வரும் 16ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்.
News September 1, 2025
திருவள்ளூரில் நடந்த நான் முதல்வன் திட்ட முகாம்.

திருவள்ளூரில் நடைபெற்ற ‘நான் முதல்வன்-உயர்வுக்குப் படி’ திட்ட முகாமில், உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்விக்குத் துணைபுரியும் இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
News September 1, 2025
காற்றில் பறந்த இரு ராட்சத பந்தல்; பரபரப்பு

எண்ணுார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரேபிய பாணியில் அமைக்கப்பட்டிருந்த இரு ராட்சத பந்தல்கள், பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பறந்து சென்று சாலையில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பந்தலில் அமர்ந்திருந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நிருபர்கள், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.