News August 30, 2025

திருச்சி: விவசாயிகள் மாநில குழு கூட்டத்திற்கு அழைப்பு

image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள மாணிக்கம் இல்லத்தில் நாளை (ஆக.31) காலை நடைபெற உள்ளது. இதில் மாநில தலைவர் குணசேகரன், பொது செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சிவசூரியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 3, 2025

திருச்சி: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

திருச்சி மக்களே..சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

News September 3, 2025

திருச்சி: அதிக பயணிகளை கையாண்டு சாதனை

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவைக்கு போட்டியாக ஏர் இந்தியா நிறுவனமும் சேவை அளித்து வருகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரே நாளில் உள்நாடு மற்றும் வெளிநாடு என 7293 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இரண்டாவது முறையாக எட்டப்பட்டுள்ளதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

திருச்சியில் குடியரசுத் தலைவரை வரவேற்ற அமைச்சர்கள்

image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் செல்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்ததார். அப்போது அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். அதையடுத்து ஹெலிகாப்டர் மூலமாக திருவாரூர் நோக்கி குடியரசு தலைவர் புறப்பட்டு சென்றார்.

error: Content is protected !!