News April 9, 2024
இந்திய குடும்பங்களில் கடன் அதிகரிப்பு

இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தில் குடும்ப கடன்கள் 40% வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அதே நேரம், குடும்ப சேமிப்பு 5.1% குறைந்துள்ளது. விலை ஏற்றத்தால் வீடு, வாகனங்கள் போன்ற சொத்துகளை வாங்க மக்கள் அதிக கடன் பெறுவதால் சேமிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர்

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் சேர திரளான மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என அறிந்த CM ஸ்டாலின், அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகளில் 15 சதவிகிதமும், சுயநிலை கலை & அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதமும் கூடுதலாக உயர்த்த உத்தரவிட்டிருக்கிறார் என கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
வரலாற்றில் இன்று

1099 – முதலாம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ டோ காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. 2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர்.
News July 8, 2025
கழிவுகளை நீக்கும் லெமன் டீ

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.