News August 30, 2025
மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்வு தளப் பேருந்துகள்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்வு தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே 10 பேருந்துகள் சேலத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வந்த நிலையில், மீதமுள்ள பேருந்துகள் வர தொடங்கியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 1, 2025
சேலம் வழியாக மதுரை-ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள்

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்.10 முதல் நவ.29 வரை சேலம் வழியாக மதுரை- ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள் (06059/06060) அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் மதுரையில் இருந்து ப்ரௌனிக்கும், சனிக்கிழமைதோறும் ப்ரௌனியில் இருந்து மதுரைக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News September 1, 2025
சேலம் வழியாக பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்!

பண்டிகைகளை முன்னிட்டு செப்.05 முதல் அக்.20 வரை சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு-சந்தரகாசி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்(06081/06082) இயக்கப்படும் என்று அறிவிப்பு. வெள்ளிக்கிழமைதோறும் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சந்தரகாசிக்கும், திங்கட்கிழமைதோறும் சந்தரகாசியில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News August 31, 2025
சேலம் மாணவர்கள் பதக்கங்களை வென்று அசத்தல்!

7வது மாநில அளவிலான பின் கார்ட் சிலாட் போட்டி விழுப்புரத்தில் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் சேலத்தைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேலம் மாவட்ட செயலாளர் அஸ்வின் மற்றும் பயிற்சியாளர் சிவநாதன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.