News August 30, 2025
டிரம்ப்பால் டாய்லெட்டுக்கு போன USA பிம்பம்: சுல்லிவன்

அமெரிக்காவின் பிம்பம் டாய்லெட்டில் கிடப்பதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் விமர்சித்துள்ளார். அதிக வரிவிதிப்பின் காரணமாக, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக திரும்புவதாகவும், இப்போது பலநாடுகள் USA-ஐ நம்பகமான கூட்டாளியாக கருதாமல், உறவை சீர்குலைக்கும் நாடாக பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
அனைத்து வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் தேர்தல் ஆணையத்தை வைத்து, BJP வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பிஹாரில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 1, 2025
BJP தலைவர்களிடம் ஆதரவு கோருவேன்: சுதர்சன் ரெட்டி

தனது வேட்புமனுவை தகுதியின் அடிப்படையில் அனைத்து லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் பரிசீலிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளரான அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், BJP உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால், அவர்களிடம் ஆதரவு கோர தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அரசியல் மாண்பு என்றாலும், சுதர்சனின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News September 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 445 ▶குறள்: சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். ▶ பொருள்: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.