News August 30, 2025
கல்தார் பயன்படுத்தக் கூடாது ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தில் மா சாகுபடி செய்யும் விவசாயிகள் கல்தார் எனும் பெக்லோப் பூட்ரோசால் பயன்படுத்துவதால் மாம்பழத்தின் தரம் குறைந்து மாம்பழ கூழ் ஏற்றுமதிக்கான நிலையை அடையாமல் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் மாம்பழத்தை அடிக்கடி காய்ப்பதற்காக கல்தார் பயன்படுத்துவதால், நிலமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 31, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் தாசம்பட்டி சாம்பல் பட்டி இடையில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதன்படிஈரோட்டில் புறப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது 1ம் தேதி 2ம் தேதி வரை மொரப்பூர் வரை மட்டுமே இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மொரப்பூரிலிருந்து 3.47க்கு புறப்படும் என தகவல்
News August 31, 2025
3 முதலமைச்சர்கள் தந்த சேலம் மாவட்டம்!

தமிழ்நாட்டிற்கு மூன்று முதலமைச்சர்கள் தந்த மாவட்டம் எனும் பெருமை சேலத்திற்கு உண்டு. 1917இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகராட்சி தலைவரான ராஜாஜி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த சுப்பராயன் 1926ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், அடுத்ததாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி என மூன்று முதலமைச்சர்கள் சேலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.SHARE பண்ணுங்க!
News August 31, 2025
டூவீலர் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே பழனியாபுரியை சேர்ந்தவர் செல்லமுத்து, (75). இவர் நேற்று காலை கொத்தம்பாடி பகுதியில் இருந்து பழனியாபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு பிரிவு சாலையில் திருப்பியபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிமுத்து, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆத்தூர் ஊரக போலிசார் விசாரிக்கின்றனர்.