News August 30, 2025
மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு எல்ஐசி முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய <<17560165>>இங்க க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.
Similar News
News September 1, 2025
நோட்புக்ஸ் விலை குறைய வாய்ப்பு?

5%, 18% என்ற இரட்டை அடுக்கிற்குள் GST-யை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காகிதம், அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான GST வரியை 5% வரம்பிற்குள் கொண்டுவர அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் வலுயுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்தும் அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இதனால் நோட்புக்ஸ், காலண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது.
News September 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 1, 2025
‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை முற்பகல் 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், திரைக்கு வருவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில், நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.