News August 30, 2025

₹300 கோடி வசூல் செய்த அனிமேஷன் படம்

image

கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ‘மகாவதார் நரசிம்மா’ இதுவரை ₹300 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் இப்படம் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் 7 படங்களில் இது முதல் படமாகும்.

Similar News

News August 31, 2025

காதல் குறித்து மனம் திறந்த நிவேதா

image

தனது காதல் குறித்து நிவேதா பெத்துராஜ் மனம் திறந்துள்ளார். வரும் அக்டோபரில் நிச்சயதார்த்தமும், 2026 ஜனவரியில் திருமணமும் நடக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஜித் இப்ரானை 5 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் சந்தித்ததாகவும், அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என இருவரும் கேட்டுக் கொண்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

News August 31, 2025

83 வயது பாட்டிக்கும் 23 வயது இளைஞருக்கும் டும் டும் டும் ❤️

image

காதலுக்கு கண்ணில்லை… அது அந்த காலம். காதலுக்கு வயதில்லை… இது இந்தக் காலம். ஜப்பானில் 23 வயது மாணவன் கோஃபு, உடன் படிக்கும் மாணவியின் 83 வயது பாட்டி ஐகோவுடன் டேட்டிங் செய்து வருகிறார். முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தாலும் வயது காரணமாக தொடக்கத்தில் இருவரும் தயக்கம் காட்டியுள்ளனர். அதன் பிறகு பேசி புரிந்து கொண்டு தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

News August 31, 2025

துலீப் டிராபியை ஒளிபரப்பாதது ஏன்? BCCI விளக்கம்

image

துலீப் டிராபி தொடரை ஒளிபரப்பாததற்கு ரசிகர்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், BCCI மௌனம் கலைத்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் இறுதி போட்டி நிச்சயமாக ஒளிபரப்பப்படும் எனவும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான போட்டிகளை ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் போட்டிகளுக்கு BCCI அதிக முக்கியத்துவம் தருவதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!