News August 30, 2025
செங்கல்பட்டு: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் இந்த <
Similar News
News September 3, 2025
செங்கை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!
News September 3, 2025
செங்கல்பட்டு: இரவில் ரயிலை மறித்து திடீர் போராட்டம்

சென்னை கடற்கரை- அரக்கோணம் மின்சார ரயில் நேற்று இரவு பாலூர் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் விரைவு ரயிலுக்கு வழிக்காக, 2வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News September 3, 2025
குடியரசு தலைவரை வரவேற்ற துணை முதல்வர்

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் த.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அரசின் சார்பில் அவருக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.