News August 30, 2025

‘கருப்பு’ ரிலீஸில் தாமதம்?

image

சூர்யாவின் ‘கருப்பு’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இன்னும் சில காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜி நினைக்க, இதுவரை எடுத்த காட்சிகள் திருப்தியாக இருப்பதாக கூறி, அதற்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதிக்கவில்லையாம். இதனால் இழுபறி நீடிக்க, பட ரிலீஸ் கிறிஸ்துமஸுக்கு தள்ளிப்போகலாம் என்கின்றனர்.

Similar News

News August 31, 2025

திமுக மூத்த தலைவரின் மனைவி காலமானார்

image

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா ஆறுமுகம் இன்று பிற்பகலில் காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதிக்கு மிக நெருக்கமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2025

தெருநாய்கள் வழக்கால் உலக ஃபேமஸ் ஆன நீதிபதி

image

தெரு நாய்களின் வழக்கில் தீர்ப்பு வழங்கியதற்காக நான் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தனக்கு ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்க்கு அவர் நன்றியும் கூறியுள்ளார். முன்னதாக, தெருநாய்களை பிடித்து ஊசி போட்டுவிட்டு மீண்டும் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என அவர் தீர்ப்பளித்திருந்தார்.

News August 31, 2025

ஐரோப்பாவும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டும்: USA

image

அமெரிக்காவை போல ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. PM மோடி – ஜிங்பிங் சந்திப்பிற்கு மத்தியில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை வளர்ப்பதாக இந்தியா மீது 50% வரிவிதித்தது.

error: Content is protected !!