News August 30, 2025
வேலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி..

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு 30 ஆயிரம் முதல் 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த லிங்கை <
Similar News
News September 4, 2025
வேலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும் என வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளர்.
News September 4, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால், இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News September 3, 2025
மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள SC/ST வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பண பலன்களை விரைந்து கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .