News August 30, 2025
RR அணியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட்!

RR அணியின் தலைமை பயிற்சியாளர் பணியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதாக RR அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் RR அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகுகிறார் என கூறப்படும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News August 31, 2025
‘இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்’

கூட்டணி உடன்படிக்கை விவகாரத்தில் இபிஎஸ், முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை தி.நகரில், தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திடுவார்கள். அப்படித்தான் 2024 தேர்தலில் இபிஎஸ் கையெழுத்திட்டார். ஆனால், பேசியபடி ராஜ்யசபா சீட்டு வழங்கவில்லை என கூறியுள்ளார்.
News August 31, 2025
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், நிர்வாகப் பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் ஜிவால் பணி கோப்புகளை வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தார். இவர் 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
News August 31, 2025
தலைமையை மாற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்?

2026 ஐபிஎல் தொடருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் புதிய கேப்டனை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 சீசனில் அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். முதல் 7 போட்டிகளில் சிறப்பாக ஆடிய டெல்லி அதன் பிறகு சொதப்பி பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இந்த நிலையில் 2026 சீசனுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளார். அக்சர் படேல் அணியில் வீரராக மட்டுமே தொடர்வார் என தெரிகிறது. யார் அந்த புதிய கேப்டன்?