News August 30, 2025

₹1,000 உரிமைத் தொகை.. உதயநிதி சொன்ன குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலட்சியமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News August 31, 2025

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வண்டி ஓட்டினால் ₹1 lakh பைன்!

image

மெயின் ரோட்டில் போலீசார் பிடிப்பார்கள் என, சந்து பொந்துகளில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டுவார்கள். பிள்ளைகளின் இச்செயலில், பெற்றோருக்கும் பங்கு உண்டு அல்லவா. அப்படி பிள்ளைகள் வண்டி ஓட்டினால், பஞ்சாயத்துக்கு ₹1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என தெலங்கானாவின் நாகிரெட்டிபள்ளி கிராமத்தினர் செக் வைத்துள்ளனர். இந்த நடைமுறையை அனைத்து ஊர்களிலும் கொண்டுவந்தால், நன்றாக இருக்குமே..!

News August 31, 2025

திமுக மூத்த தலைவரின் மனைவி காலமானார்

image

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா ஆறுமுகம் இன்று பிற்பகலில் காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதிக்கு மிக நெருக்கமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2025

தெருநாய்கள் வழக்கால் உலக ஃபேமஸ் ஆன நீதிபதி

image

தெரு நாய்களின் வழக்கில் தீர்ப்பு வழங்கியதற்காக நான் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தனக்கு ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்க்கு அவர் நன்றியும் கூறியுள்ளார். முன்னதாக, தெருநாய்களை பிடித்து ஊசி போட்டுவிட்டு மீண்டும் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என அவர் தீர்ப்பளித்திருந்தார்.

error: Content is protected !!