News August 30, 2025
BREAKING: கிருஷ்ணகிரி போலீஸ் அதிரடி

காவேரிப்பட்டினம் அருகே மோட்டூர் கிராமத்தில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்ய வேண்டுமென நாடகமாடி, பச்சிளம் குழந்தையை கடத்திய விஜயசாந்தி என்பவரை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் முரளி குழந்தையை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார். தனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் கடத்தியதாக விஜயசாந்தி போலீசிடம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
கிருஷ்ணகிரியில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

கிருஷ்ணகிரி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News August 31, 2025
கிருஷ்ணகிரி: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 31, 2025
கிருஷ்ணகிரி: 6 மாத பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் தங்கி இருந்த ஈஸ்வரியிடம், விஜயசாந்தி என்பவர் தனக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது. பெண்குழந்தைக்கு ஆடை வாங்கி கொடுத்தால் தோஷம் நீங்கும் என கூறி ஈஸ்வரியின் 6 மாத பெண்குழந்தையை கடத்தி சென்றுள்ளார். போலீசார் விஜயசாந்தியை கைது செய்து விசாரித்த போது, அவருக்கு குழந்தை பிறந்து இறந்ததை கணவரிடம் சொல்லாமல் இருந்து, அதை சமாளிக்க இவ்வாறு செய்தது தெரிய வந்தது.