News August 30, 2025
மணப்பாறை அருகே பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி, அணியாப்பூர் அருகே வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் வரும் செப்.2 முதல் 4-ம் தேதி வரை திபெத்தியன் பார்டர் போலீஸ் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் இப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
ஸ்ரீரங்கம்: ஹெலிபேடு தளத்தில் அதிகாரிகள் ஆய்வு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற செப்.,3-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை தருவதையொட்டி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள ஹெலிபேடு தளத்தில் தஞ்சை பிரிவு ஹெலிபேடு அதிகாரிகள், வருவாய்துறை, மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரதுறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை இன்று முதல் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
News August 31, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓரிகாமி பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், சிறுவர்களுக்கு, கிராப்ட் பேப்பர்களை கொண்டு ஓவியங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி தலைமை வகித்தார். மைய நூலகர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். அரசங்குடி அரசுஉயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் பயிற்சியளித்தார்.
News August 31, 2025
திருச்சி: ரூ.45,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

திருச்சி இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <