News August 30, 2025
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
Similar News
News August 31, 2025
விழுப்புரம்: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க
News August 31, 2025
மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள்: பணிகள் முடக்கம்.

விழுப்புரம் உட்பட ஆறு மாவட்டங்களில், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதால், சுகாதார மற்றும் ஊரகப் பணிகள் ஆய்வு முடங்கிப் போயுள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News August 31, 2025
விழுப்புரம்: அமைதியைத் தேடி ஆரோவில் செல்லலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், வார இறுதிப் பயணத்திற்கு ஆரோவில் ஒரு சிறந்த தேர்வாகும். சர்வதேச நகரமான இங்கு, அமைதி (ம) ஆன்மிகச் சூழலை அனுபவிக்கலாம். இங்குள்ள பிரதான இடமான மாத்ரிமந்திர்-ஐ வெளியில் இருந்து பார்வையிடலாம், உள்ளே செல்ல முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இது தவிர, இங்குள்ள பல்வேறு சர்வதேச அரங்குகள் மற்றும் சூழல் சார்ந்த அமைப்புகளைக் கண்டு ரசிக்கலாம். நண்பர்களுக்கு SHARE செய்து போய்ட்டு வாங்க!