News April 9, 2024

காண்போரை அசர வைக்கும் 9 வயது சிறுமி

image

ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி 75 கிலோ எடையை தூக்கி காண்போரை அசர வைத்துள்ளார். பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. இவர் ஜிம்மில் 75 கிலோ எடையை தூக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 2 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

image

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 12, 2025

சஞ்சுவை வாங்க இதுதான் காரணமா?

image

ஜடேஜாவை கொடுத்தாவது சஞ்சுவை வாங்க, CSK முயற்சி எடுப்பதில் முக்கிய காரணம் ஒன்றும் ஒளிந்திருப்பதாக பேசப்படுகிறது. தோனிக்கு அடுத்து சரியான கேப்டனை நியமிக்க முடியாமல் CSK திணறுகிறது. ஜடேஜா, ருதுராஜ்
ஆகியோர் கேப்டனாக சோபிக்காத நிலையில், தற்போது சஞ்சுவை CSK நிர்வாகம் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, ஜடேஜாவையும் கொடுக்க முன்வருவதாக கூறப்படுகிறது. இது சரியான முடிவு என நினைக்கிறீங்களா?

News November 12, 2025

வேலை இல்லையா? அரசு திட்டம் உதவும்!

image

கிராமப்புறங்களில் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் தொழிற் பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சேர குறைந்தது 8-வது படித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது காலை & மாலையில் உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு தொழில் தொடங்க வங்கியில் இருந்து கடனும் பெற்றுத்தரப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!