News August 30, 2025

ராமநாதபுரம்: ஒரே ஆண்டில் 15,247 பேரை கடித்த நாய்கள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-3,300, ராமநாதபுரம்-2,742, பரமக்குடி-1,938, கமுதி-1,938, திருவாடானை-1,497, முதுகுளத்தூர்-965, கடலாடி-869, ஆர்.எஸ்.மங்கலம்-837, திருப்புல்லாணி-805, போகலூர்-256, நயினார் கோவில்-100 என மொத்தம் 15,247 பேர் கடந்த ஆண்டில் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக சுற்றும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 31, 2025

ராம்நாடு: 12th தகுதி.. ரூ.81,700 சம்பளம்! உடனே APPLY

image

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் (ம) ஐடிஐ படித்தவர்கள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். செப். 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! உடனே SHARE பண்ணுங்க.

News August 31, 2025

ராமநாதபுரம் மக்களே இலவச பயிற்சி! மிஸ் பண்ணாதீங்க!

image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 30 நாள் கொத்தனார் மற்றும் கான்கீரிட் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 19-45 வயதுடையோர் பங்கேற்கலாம். 5.9.2025க்குள் பதிவு செய்ய வேண்டும். 8825954443, 8056771986 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க

News August 31, 2025

BREAKING : பரமக்குடி அருகே விபத்தில் 3 பேர் பலி

image

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் இருந்து குற்றாலம் சென்ற காரும், மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்த மினி லாரியும் இன்று (ஆக. 31) அதிகாலை 2 மணியளவில் பரமக்குடி நென்மேனி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் காளீஸ்வரன், ஜமுனா, ரூபினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

error: Content is protected !!