News August 30, 2025

திமுகவில் பனிப்போர்.. அமைச்சர்களுக்குள் சண்டை?

image

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அமைச்சர்கள் நேருவுக்கும், சேகர்பாபுவுக்கு மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியிருக்கிறார். அதற்கு, சேகர்பாபுவை கலந்தாலோசித்த பின்னரே, ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.

Similar News

News August 31, 2025

தொகுதிகளை பறிக்கும் திமுக? டென்ஷனில் காங்கிரஸ்

image

கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற அதே தொகுதிகளில் இம்முறையும் போட்டியிட காங்., திட்டமிடுகிறதாம். ஆனால், திமுக நிர்வாகிகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனராம். அதன்படி, காரைக்குடி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, ஊட்டி, அறந்தாங்கி, நாங்குநேரி தொகுதிகள் ’கை’விட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ‘தொகுதியை கொடு, இல்லன்னா கூட்டணியை விடு’ என சத்யமூர்த்தி பவன் கொதிக்கிறதாம்.

News August 31, 2025

ரேஷன் அட்டை.. அமைச்சர் புதிய அறிவிப்பு

image

தமிழகத்தில் 5 லட்சம் NPHH(Non-Priority Household) ரேஷன் அட்டைகளை PHH ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு முன்னுரிமை ரேஷன் கார்டு (PHH) கொடுக்கப்படுகிறது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

News August 31, 2025

இல.கணேசன் குடும்பத்தினருக்கு EPS ஆறுதல்

image

மறைந்த கவர்னர் இல.கணேசன் குடும்பத்தினருக்கு EPS நேரில் ஆறுதல் கூறினார். கடந்த 15-ம் தேதி உடல்நலக்குறைவால், நாகாலாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் காலமானார். அப்போது, தேர்தல் பரப்புரையில் இருந்ததால், EPS நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால், இன்று(ஆக.31) சென்னையில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!