News August 30, 2025

மயிலாடுதுறை: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 1, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News August 31, 2025

மயிலாடுதுறை: ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்?

image

மயிலாடுதுறை மக்களே, ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக மயிலாடுதுறையில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம்ல ரயில் நிக்குதுன்னு <>இங்க <<>>கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 31, 2025

மயிலாடுதுறை: ரூ.45,000 சம்பளத்தில் வேலை!

image

மயிலாடுதுறை இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!