News August 30, 2025
TN-க்கு கல்வி நிதி கேட்டு 2-வது நாளாக MP உண்ணாவிரதம்

அரசியலமைப்புக்கு விரோதமாக TN-க்கு கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக MP சசிகாந்த் செந்தில் சாடியுள்ளார். SSA கல்வி திட்டத்தின் கீழ் 2023 – 24, 2024 – 25-ம் கல்வியாண்டில் நிலுவையில் உள்ள ₹2,401 கோடியை விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூரில், அவர் நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பிரகாஷ்ராஜ், கோபி நயினார் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என EPS தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 கட்டங்களாக 118 தொகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் 100 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக EPS கூறியுள்ளார். மேலும், BJP உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல அறிவுறுத்திய அவர், பாமக, நம்முடன்(அதிமுக) வருவது உறுதி என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News August 31, 2025
நாளை முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. நோட் பண்ணுங்க!

➤விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, எலியார்பத்தி, வீரசோழபுரம், புதூர் பாண்டியாபுரம், நத்தக்கரை, அரவக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விஜயமங்கலம் ஆகிய டோல்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
➤SBI-ல் Auto Debit முறை தோல்வியடைந்தால் 2% அபராதம் விதிக்கப்படும்.
➤LPG சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
➤வெள்ளியிலும் ஹால்மார்க் முத்திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. SHARE IT.
News August 31, 2025
‘வரவேற்கிறோம் அப்பா’ ஜெர்மனியில் CM-க்கு வரவேற்பு

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள TN CM ஸ்டாலினுக்கு ஏர்போர்ட்டில் அயலக தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பத்தை சந்தித்த CM, அவர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக பதிவிட்டுள்ளார். அப்போது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சினார். மேலும் தமிழர்களுக்கென பல முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.