News August 30, 2025
ஸ்டாலினுக்கு இடமில்லை.. வெளியான கருத்துகணிப்பு

நாட்டில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் குறித்து India Today-C Voter நடத்திய சர்வேயில் CM ஸ்டாலின் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. இதில், அசாம் மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மா முதலிடத்திலும், UP CM யோகி 5-வது, AP CM சந்திரபாபு நாயுடு 7-வது, WB CM மம்தா பானர்ஜி 9-வது இடத்திலும் உள்ளனர். அதேநேரம், தேசிய அளவில் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் CM ஸ்டாலின் 5-வது இடத்தில் உள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 31, 2025
‘வரவேற்கிறோம் அப்பா’ ஜெர்மனியில் CM-க்கு வரவேற்பு

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள TN CM ஸ்டாலினுக்கு ஏர்போர்ட்டில் அயலக தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பத்தை சந்தித்த CM, அவர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக பதிவிட்டுள்ளார். அப்போது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சினார். மேலும் தமிழர்களுக்கென பல முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
காய்ச்சலை விரட்டும் ‘சீந்தில் தேநீர்’

இந்த மழைக்காலத்தில் பலரும் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி போன்ற பிரச்னைகளால் கடும் அவதிப்படுவார்கள். அவர்கள் சீந்தில் தேநீரை பருகும்படி சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீந்தில்கொடி இலை, சுக்கு, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். அதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், சுவையான சீந்தில் தேநீர் ரெடி. SHARE IT.
News August 31, 2025
Health: சிக்கனை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணலாமா?

சமைத்த சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது வழக்கம் தான். ஆனால் அதை எத்தனை நாட்கள் ப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சிக்கனை சமைத்த 2 மணி நேரத்திற்குள், அதனை காற்று புகாத டப்பாக்களில் / சிப் லாக் கவரில் வைக்கவும். இது பாக்டீரியா தொடர்பிலிருந்து சிக்கனை பாதுகாக்கும். இப்படி செய்தால், அதனை 2 நாள்கள் வரை வைத்து சாப்பிடலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.