News August 30, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 30) “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” : கீழக்கரை நகராட்சி : இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி, கீழக்கரை, மண்டபம் வட்டாரம் : சமுதாய கூடம், என்மனம்கொண்டான், கமுதி வட்டாரம் : சேவை மையம், முதல் நாடு ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News August 31, 2025
ராமேஸ்வரம்: மதுரை, திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 22, 23, 24, 25, 29, 30 தேதிகளில் ராமேஸ்வரம் – மதுரை ரயில் (வ.எண்: 56714) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதே தேதிகளில் திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி ரயில்கள் (வ.எண்: 16849/16850) மானாமதுரை – ராமேஸ்வரம் – மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகின்றன. இந்நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு மதியம் 2:40 மணிக்கு முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.
News August 31, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

இன்று (ஆகஸ்ட் 30) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல்துறை X தளத்தில் அறிவித்துள்ளது. *ஷேர்*
News August 30, 2025
ராமநாதபுரம்: திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை, மின்னணு வகுப்புகள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார். பயிற்சியின்போது தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கலெக்டர் சென்று அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*