News August 30, 2025

ஸ்ரீவை. அருகே கோவில் கொடை விழாவில் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணை கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது நடந்த தகராறில் தர்மர் (54) என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 31, 2025

தூத்துக்குடி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

image

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று(ஆக.31) நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்கள் செல்வதற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 உயர்ந்து ரூ.95 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது என கூறப்படுகிறது.

News August 30, 2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி கடும் கண்டனம்

image

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் நேற்று 50% வரி விதிப்பால் நடுக்கடலிலேயே தூத்துக்குடி துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இன்று எம்பி கனிமொழி கடும் கண்டனத்தையும், வேதனையும் பதிவு செய்துள்ளார். மேலும் இதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 30, 2025

தூத்துக்குடியில் சப்புக்கொட்ட வைக்கும் உணவுகள்

image

▶️மக்ரூன்
▶️மீன் குழம்பு
▶️கருவாட்டு குழம்பு
▶️கடலைமிட்டாய்
▶️பொரிச்ச பரோட்டா
▶️கருப்பட்டி மிட்டாய்
▶️வெந்தயகளி
▶️உளுந்தங்களி
▶️மஸ்கோத் அல்வா
இதில் உங்களுக்கு பிடித்த உணவுகளை கமெண்ட் செய்யுங்கள்

error: Content is protected !!