News August 30, 2025

ராம்நாடு: லட்சத்தில் சம்பளம் மத்திய அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செப்.17ஆம் தேதி கடைசி தேதியாகும். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க

Similar News

News August 31, 2025

ராமேஸ்வரம்: மதுரை, திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

image

செப்டம்பர் 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 22, 23, 24, 25, 29, 30 தேதிகளில் ராமேஸ்வரம் – மதுரை ரயில் (வ.எண்: 56714) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதே தேதிகளில் திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி ரயில்கள் (வ.எண்: 16849/16850) மானாமதுரை – ராமேஸ்வரம் – மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகின்றன. இந்நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு மதியம் 2:40 மணிக்கு முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.

News August 31, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

image

இன்று (ஆகஸ்ட் 30) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல்துறை X தளத்தில் அறிவித்துள்ளது. *ஷேர்*

News August 30, 2025

ராமநாதபுரம்: திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை, மின்னணு வகுப்புகள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார். பயிற்சியின்போது தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கலெக்டர் சென்று அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*

error: Content is protected !!