News April 9, 2024

பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை 15 ஆம் தேதி தீர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்தது. வருகின்ற 15ஆம் தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது.

Similar News

News February 1, 2026

திருப்பூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

திருப்பூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!