News August 30, 2025
BREAKING: தங்கம் விலையில் வரலாறு காணாத மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.30) சவரனுக்கு ₹680 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,620-க்கும், சவரன் ₹76,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ₹77,000 நெருங்கியதால் நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News August 30, 2025
இந்திய ராணுவத்தில் புதிய கமாண்டோ படை

இந்திய ராணுவத்தில் ‘பைரவ்’ எனும் புதிய கமாண்டோ படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாட்படையில் இருக்கும் வீரர்களில் 250 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, நவீன ஆயுதங்கள், டிரோன்கள் வழங்கப்பட்டு இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் அக்.31-ம் தேதிக்குள் 5 யூனிட் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்பட உள்ளனர்.
News August 30, 2025
USA-ன் 50% வரி: PM மோடிக்கு EPS கடிதம்

USA-ன் 50% வரியால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் கோரி PM மோடிக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். ஏற்றுமதி இழப்பை சமாளிக்க இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பருத்தி நூலின் வரியில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உற்பத்தியாளர்களின் நிலுவையில் உள்ள கடன்களுக்கு வட்டியில் தளர்வு அளிக்கவும் கோரியுள்ளார்.
News August 30, 2025
BREAKING: செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயருகிறது

விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை, சமயபுரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதன்படி, கார், ஜீப், லாரி, பஸ்கள், இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவற்றின் கட்டணம், குறைந்தபட்சம் ₹5-ல் இருந்து அதிகபட்சமாக ₹395 வரை உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.