News August 30, 2025

மாவட்டத்தில் 1,300 விநாயகர் சிலைகள் விஜர்சனம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் சப் டிவிஷனில் 465, திண்டிவனத்தில் 302, செஞ்சியில் 450, கோட்டக்குப்பத்தில் 208, விக்கிரவாண்டியில் 311 என மொத்தம் 1,736 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில், 1300 சிலைகள் கரைக்கப்பட்டது. 3 நாட்கள் வழிபாடு செய்த இந்த சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர்.

Similar News

News September 20, 2025

விழுப்புரம்: 10th Pass போதும்! காவல் துறையில் வேலை…

image

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற கான்ஸ்டபிள், சிறைக் காவலர் போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 – 26 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்!

News September 20, 2025

கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 20, 2025

விழுப்புரம்: புரட்டாசி முதல் சனி! இதை மறக்காம பண்ணிருங்க!

image

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. தென்புத்தூர் கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஷேர்!

error: Content is protected !!