News April 9, 2024

ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி

image

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என புகழாரம் சூட்டியிருந்தார்.

Similar News

News November 6, 2025

RCB அணி விற்பனை.. வாங்குவதற்கு கடும் போட்டி

image

2025 ஐபிஎல் சாம்பியன்ஸான RCB அணியை விற்க டியாஜியோ பிஎல்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. RCB ஆடவர், மகளிர் அணிகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அவை முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதானி குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட், JSW குரூப்ஸ் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் RCB அணியின் பெயரும் மாற்றப்படவுள்ளது.

News November 6, 2025

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பொழியும்

image

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, விருதுநகர், செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே சென்று மழையில் நனையாதீர்கள். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News November 6, 2025

ரஜினிக்கு கமல் எழுதிய லெட்டர்… மடல்… இல்ல கடுதாசி!

image

சினிமாவில் ரஜினியுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தி, ரஜினிக்கு கமல் X-ல் பதிவிட்டுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ‘அன்புடை ரஜினி, காற்றால் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!