News August 30, 2025

மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டை!

image

திருச்சி மலைக்கோட்டை என்பது மலைப் பாறையில் கட்டப்பட்ட ஓர் பழங்கால கோட்டை.யாகும். சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோட்டை முதன்முதலாக பல்லவர்களால் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோழர்கள், தில்லி சுல்தான், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என பலரது கட்டுப்பாட்டின் கீழ் இக்கோட்டை இருந்து வந்தது. மேலும் இக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 100 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. SHARE NOW!

Similar News

News August 30, 2025

திருச்சி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் சென்று <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News August 30, 2025

மணப்பாறை அருகே பொதுமக்கள் நடமாட தடை

image

திருச்சி, அணியாப்பூர் அருகே வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் வரும் செப்.2 முதல் 4-ம் தேதி வரை திபெத்தியன் பார்டர் போலீஸ் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் இப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 30, 2025

திருச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் நாளை (ஆக.31) காலை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழிற்துறை சார்ந்த 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்துகொண்டும் அல்லது https://www.tnpeivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தும் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!