News August 30, 2025
Health Tips: மழைகாலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள்

மழைக்காலத்தில் சளி, ஜுரம் எளிதில் வரும். இதனை தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, பேரிக்காய், நாவல் பழம், பப்பாளி, ப்ளம்ஸ், மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். இவை உங்கள் உடலில் நார் சத்து, நீர் சத்து, தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கூட்டுகிறது. SHARE.
Similar News
News August 30, 2025
₹300 கோடி வசூல் செய்த அனிமேஷன் படம்

கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ‘மகாவதார் நரசிம்மா’ இதுவரை ₹300 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் இப்படம் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் 7 படங்களில் இது முதல் படமாகும்.
News August 30, 2025
மரங்களை நட்டால் ஆண்களும் தாயாகலாம்: சீமான்

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை என விஜயை மறைமுகமாக சீமான் தாக்கி பேசியுள்ளார். மரங்களின் மாநாட்டில் பேசிய அவர், டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை விற்கும் அவல நிலை ஏற்படும் எனவும், வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மண்ணில் மரங்களை நட்டால் ஆண்களும் தாயாக முடியும் என்றும் கூறியுள்ளார்.
News August 30, 2025
ஆசிய கோப்பை தொடர்: போட்டி நேரம் மாற்றம்

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர், செப்.9-ல் தொடங்கி செப்.28 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரவு 7:30 மணிக்கு பதிலாக 8:00 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி, செப்.10-ல் முதல் அணியாக ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.