News April 9, 2024
கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் இல்லை

கெஜ்ரிவால் கைது சட்டப்படி தானே தவிர, தேர்தல் சமயம் என்பதற்காக அல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ED கைது செய்ததை எதிர்த்த வழக்கில், அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்க முடியாது எனத் தெரிவித்த கோர்ட், பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
பொங்கல்.. டாஸ்மாக் வசூல் இவ்வளவு கோடியா?

பொங்கல் விடுமுறையான ஜன.14 – 18 வரையிலான 5 நாள்களில் ₹850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜன.14-ல் ₹217 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், திருவள்ளுவர் தினமான 16-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாள் மட்டும் ₹301 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. முன்னதாக, டாஸ்மாக் வசூலிலே திமுக அரசு சாதனை படைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
News January 20, 2026
இலவச மருத்துவ ஆலோசனை வேணுமா? இதோ இருக்கு!

தற்போது மழை காலத்திலிருந்து வெயில் காலம் வந்துள்ளது. இந்த மாற்றம் சிலருக்கு ஜுரம் போன்ற ஆரோக்கிய பிரச்னைகளை உண்டாக்கலாம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே அப்போலோ மருத்துவர்களின் இலவச ஆலோசனை பெற வழியிருக்கிறது. இதற்கு playstore-ல் இருந்து Hello BPCL என்ற APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் Apollo health Card-ஐ க்ளிக் செய்தால் ₹800 மதிப்புள்ள மருத்துவ ஆலோசனை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். SHARE.
News January 20, 2026
தன்னைத் தானே சூப்பர் CM என நினைக்கிறார் ஸ்டாலின்: EPS

தமிழக அரசின் தவறான அறிக்கையை வாசிக்கவே கவர்னர் ரவி மறுத்துள்ளார் என EPS தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், கவர்னர் உரையில் CM தனது சொந்த கருத்துகளை பதிவு செய்கிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிலேயே சூப்பர் CM என ஸ்டாலின் தன்னை கற்பனை செய்துகொள்கிறார் எனவும் கிண்டலடித்துள்ளார்.


