News August 30, 2025
முதல்வரை விஜய் அப்படி சொல்லி இருக்கக்கூடாது: அமீர்

நடிகராக ‘அங்கிள்’ என்று சொல்வது தவறில்லை; ஆனால் ஒரு கட்சியின் தலைவராக ‘மாண்புமிகு முதல்வர்’ என அழைப்பது தான் சரி, விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். TVK மாநாட்டில் ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில், விஜயை குற்றவாளியாக சேர்த்தது போலீஸின் செயல்பாட்டை கேள்விக் குறியாக்குகிறது எனக் கூறிய அவர், ரசிகர் – விஜய் இடையேயான பிரச்சனையில் பொதுவிவாதம் தேவையில்லை என்றார்.
Similar News
News August 30, 2025
SPACE: அறிவியலால் விளக்க முடியாத விண்வெளி மர்மங்கள்

பெரும்பாலான இயற்கை நிகழ்வுகளை அறிவியல் விளக்கினாலும், விண்வெளியில் உள்ள பல மர்மங்களுக்கு இன்றளவும் பதில்கள் இல்லை. நிலவு தோன்றியது எப்படி? கருந்துளைக்குள் என்ன நடக்கும்? புவி ஈர்ப்பு விசை உருவானது எப்படி? விண்வெளி எவ்வளவு பெரியது? உயிர்கள் தோன்றியது எப்படி? வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? என அறிவியலால் விளக்கமுடியாத புதிர்கள் இருக்கின்றன. நீங்கள் அறிய விரும்பும் மர்மம் என்ன? SHARE IT!
News August 30, 2025
பள்ளியில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி

கர்நாடகாவில் அரசு பள்ளி பாத்ரூமில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் அந்த மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. ஆனால், கர்ப்பமானதை மறைத்த அவர், பள்ளிக்கு சென்றபோது வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது, இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 30, 2025
மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: CM ஸ்டாலின்

USA-ன் 50% வரியால் தமிழ்நாட்டின் இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு தயார் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.