News August 30, 2025
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு 6-வது முறையாக காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 22 மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களும் ஜூலை 28 மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் என மொத்தம் 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் நேற்று (ஆக. 29) நீதிமன்ற காவல் முடிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு செப். 4 வரையும் 5 மீனவர்களுக்கு செப் 12 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது
Similar News
News August 30, 2025
ராமநாதபுரம்: திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை, மின்னணு வகுப்புகள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார். பயிற்சியின்போது தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கலெக்டர் சென்று அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*
News August 30, 2025
ராமநாதபுரம்: ஒரே ஆண்டில் 15,247 பேரை கடித்த நாய்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-3,300, ராமநாதபுரம்-2,742, பரமக்குடி-1,938, கமுதி-1,938, திருவாடானை-1,497, முதுகுளத்தூர்-965, கடலாடி-869, ஆர்.எஸ்.மங்கலம்-837, திருப்புல்லாணி-805, போகலூர்-256, நயினார் கோவில்-100 என மொத்தம் 15,247 பேர் கடந்த ஆண்டில் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக சுற்றும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News August 30, 2025
ராம்நாடு மக்களே, இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

ராம்நாடு ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்
தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க