News August 30, 2025
சேலம்: பெங்களூரு- மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆக.31- ம் தேதி மங்களூரு சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில் செப்.01- ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Similar News
News August 30, 2025
மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்வு தளப் பேருந்துகள்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்வு தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே 10 பேருந்துகள் சேலத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வந்த நிலையில், மீதமுள்ள பேருந்துகள் வர தொடங்கியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 30, 2025
கல்தார் பயன்படுத்தக் கூடாது ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தில் மா சாகுபடி செய்யும் விவசாயிகள் கல்தார் எனும் பெக்லோப் பூட்ரோசால் பயன்படுத்துவதால் மாம்பழத்தின் தரம் குறைந்து மாம்பழ கூழ் ஏற்றுமதிக்கான நிலையை அடையாமல் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் மாம்பழத்தை அடிக்கடி காய்ப்பதற்காக கல்தார் பயன்படுத்துவதால், நிலமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
News August 30, 2025
சேலம்: 10வது படித்தால் வங்கியில் வேலை!

சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Office Assistant(OA), Attender, Faculty, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.14,000 முதல் 30,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <