News August 30, 2025

பேட்டையில் ஒர்க் ஷாப் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை பேட்டையில் டூவீலர் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர் பாருக். இவருடைய கடைக்கு நேற்று இரவு ஒருவர் தன்னுடைய வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை, அதனை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பாரூக், நான் மருத்துவமனைக்கு செல்லவதால் வர இயலாது எனக் கூறியுள்ளார். கோபமடைந்த அந்த நபர் அறிவாளை எடுத்து பாருக்கை வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த பாரூக் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 30, 2025

பல்கலை வகுப்புகள் செப்.1 முதல் துவக்கம்; துணை வேந்தர் தகவல்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.

News August 30, 2025

மாவட்ட சுகாதார அலுவலர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலராக டாக்டர் கீதாராணி பணி செய்து வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திற்கு பொறுப்பு சுகாதார அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதிய சுகாதார அலுவலராக விஜயசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுகாதார அலுவலருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News August 30, 2025

திருநெல்வேலி: உங்கள் பகுதி காவல் நிலையத்தின் எண்கள்

image

நெல்லை மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த <>லிங்கில் <<>>நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இடம்பெற்றுள்ளது. தேவைப்படும் சமயத்தில் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதன் மூலம் அழைக்கலாம். இதனை மற்ற பகுதியிலுள்ள உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!