News August 30, 2025
அதிமுக கூட்டணியில் 2 புதிய கட்சிகள்..

பாஜக – அதிமுக கூட்டணியில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், IJK தலைவர் ரவி பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது நயினாரும் உடன் இருந்தார். இதன்போது 2026 பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி, சீட் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
Similar News
News August 30, 2025
பரோட்டா + பீஃப்.. நூதன போராட்டம்

கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேண்டீனில் பீஃப் விற்கவோ, சாப்பிடவோ கூடாது என மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியின் எதிரே பரோட்டா, பீஃப் சாப்பிடும் நூதன போராட்டத்தை Beef Fest., ஆக ஊழியர்கள் நடத்தியுள்ளனர். அந்த மேலாளர் பிஹாரைச் சேர்ந்தவர் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News August 30, 2025
திமுகவில் பனிப்போர்.. அமைச்சர்களுக்குள் சண்டை?

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அமைச்சர்கள் நேருவுக்கும், சேகர்பாபுவுக்கு மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியிருக்கிறார். அதற்கு, சேகர்பாபுவை கலந்தாலோசித்த பின்னரே, ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.
News August 30, 2025
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கைது?

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை கர்ப்பமாக்கியது சட்டப்படி குற்றம் என்பதால், ரங்கராஜ் கைதாக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.