News April 9, 2024

கெஜ்ரிவாலை விடுவிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

image

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க, டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிறருடன் சேர்ந்து கெஜ்ரிவாலும் சதி வேலையில் ஈடுபட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கோர்ட், தற்போதை நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயலில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

Similar News

News March 20, 2026

FLASH: மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியல்

image

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் விரும்பும் 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் மதிமுக வழங்கியுள்ளது. அதில், 1.மதுரை தெற்கு, 2.திருச்சி கிழக்கு, 3.வேளச்சேரி, 4.மணப்பாறை, 5.சாத்தூர், 6.கோவில்பட்டி, 7.கிணத்துக்கடவு, 8.நெல்லை, 9.பாளையங்கோட்டை, 10.கடலூர் (அ) புவனகிரி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், எதெல்லாம் கிடைக்க வாய்ப்புள்ளது?

News March 20, 2026

அடி வாங்குனவன் சொல்லணும்ல: அமீர்

image

ஜன நாயகன் படத்தில் என்ன பிரச்சனை என்று இருதரப்பும் சொல்லவே இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். ஜன நாயகனின் சென்சார் தாமதத்திற்கு அதில் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அடிச்சவன் சொல்லமாட்டான்… அடி வாங்குனவன் சொல்லணும்ல என்றவர், தன்னை இதற்காகத் தான் அடிக்கிறார்கள் என ஜன நாயகன் படக்குழு சொல்ல மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 20, 2026

தொகுதி மாறுகிறார்களா பாஜக முக்கிய தலைகள்?

image

பாஜகவின் 5 முக்கிய பிரமுகர்கள் இம்முறை தொகுதி மாற முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அண்ணாமலை – அரவக்குறிச்சி டூ கோவை, வானதி – கோவை தெற்கு டூ கோவை வடக்கு, நயினார் – நெல்லை டூ சாத்தூர், தமிழிசை – விருகம்பாக்கம் டூ மயிலாப்பூர் என போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கெல்லாம் தேர்தல் பணிகளை அவர்கள் முடுக்கிவிட்டதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!