News August 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 443
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
Similar News
News August 30, 2025
இன்னும் சற்றுநேரத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுநேரத்தில் EPS தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள், அதிமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக எவ்வாறு காய் நகர்த்துவது உள்ளிட்டவை குறித்தும் பேசப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News August 30, 2025
வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

உத்தராகண்டில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் மாவட்டங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
News August 30, 2025
வெற்றியின் ரகசியம்.. இந்த 5 டிப்ஸில் உள்ளது!

*பிறர் சொல்லியோ, பிறரை வைத்தோ இலக்கை நிர்ணயிக்காதீர்கள். நீங்கள் தீர்மானியுங்கள்
*வாழ்வில் நடப்பது நல்லதோ, கெட்டதோ அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு என்பதை மறவாதீர்கள்.
*ரிஸ்க் எடுப்பதற்கு தயங்க வேண்டாம்.
*என்றைக்கும் புது விஷயங்களை கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்
*எப்போதும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக மனதில் கொள்ளுங்கள். சிறு தோல்விகளால் துவண்டு விட வேண்டாம் . SHARE IT.