News August 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 30, ஆவணி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

Similar News

News August 30, 2025

சனிக்கிழமையில் அனுமனின் முழு அருள் கிடைக்க..

image

சனிக்கிழமையில் அனுமனை வழிபடுவது கூடுதல் நன்மைகள் கொடுக்கும் என்பது ஐதீகம். சனியால் உங்களுக்கு தொல்லைகள் இருக்கும் பட்சத்தில், அதனை நீக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டு. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று, 27 வெற்றிலையை மாலையாக அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அனுமனிடம் வையுங்கள். சனி தொல்லையால் தவிப்பவர்களுக்கு நல்வழியை அனுமன் காட்டுவார். SHARE IT.

News August 30, 2025

அதிமுக, பாஜக புதிய வியூகம்.. மாறும் தமிழக தேர்தல் களம்

image

தேவேந்திர குல வேளாளர்களை ஒருங்கிணைக்க ஜான் பாண்டியனிடம், BJP புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டால் ADMK மீது அதிருப்தியில் உள்ள அவர்களை ஜான் பாண்டியன் சரிகட்டினால், அவருக்கு 5 சீட்டுகளை கொடுக்க NDA முடிவு செய்துள்ளதாம். 2024 லோக்சபா தேர்தலில் நெல்லை, குமரி, தேனியில் ADMK டெபாசிட் இழக்க தேவேந்திர குல வேளாளர்களின் எதிர்ப்பு முக்கிய காரணம் என்பது கவனிக்கத்தக்கது.

News August 30, 2025

சென்னையில் புல்லட் ரயில் சேவை.. அட்டகாசமான தகவல்

image

தென்னிந்தியாவில் புல்லட் ரயில் சேவை கொண்டு வரப்படும் என சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும் எனவும் கூறியுள்ளார். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புல்லட் ரயில் போக ரெடியா?

error: Content is protected !!