News August 30, 2025
செப்டம்பர் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்

*சமையல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. *வெள்ளியின் தரத்தை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை பதிப்பு. *செப் 1 முதல் எந்த தபாலும் Speed Post-ல் நேரடியாக அனுப்பப்படும். *சமீபமாக விலை மாற்றமில்லாத CNG, PNG கேஸ் விலை மாற்றப்படலாம். *TRAI உத்தரவுபடி மோசடி அழைப்பு, குறுஞ்செய்தியை தடுக்க Block Chain System அமல். *SBI வழிகாட்டுதலின்படி சில கிரெடிட் அட்டைகளில் ரிவார்டு பாயிண்ட்ஸ் நிறுத்தப்படலாம்.
Similar News
News August 30, 2025
ரூபாய் மதிப்பு முதல் முறையாக ₹88ஆக வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன் தினம் ₹11 காசுகள் உயர்ந்து, ₹87.58 ஆக முடிவடைந்தது. ஆனால், நேற்று இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு வெளியேறியது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு ஒரேடியாக ₹61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹88 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
News August 30, 2025
அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் இணையை 21-12, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
News August 30, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 30)

* 1835 – ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது
*1954 – தமிழக அரசியல் பிரபலம் TKS இளங்கோவன்(DMK) பிறந்தநாள் 1954
* 1957 – பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
* 1963 – நடிகர் ஆனந்த் பாபு பிறந்தநாள் (1963)
*2001 – மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்