News April 9, 2024
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 – 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 8 – ஆனி 24 ▶ கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News July 8, 2025
நாளைக்கு வேகமாக சுற்றப் போகும் பூமி: ஏன் தெரியுமா?

நாம் வாழும் பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை 9, ஜூலை 22, ஆகஸ்ட் 5 ஆகிய 3 நாள்களிலும் சற்று அதிகமான வேகத்தில் பூமி சுற்றப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாளில் 1.51 மில்லி செகண்ட் குறையுமாம். பூமியின் வேகத்துக்கு காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும், இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியின் புதிய கட்சிக்கு எதிராக வழக்கு?

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடங்கிய புதிய கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தவெக கொடியில் யானை சின்னம் இருப்பதாக பகுஜன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் பதில் அளித்தது.