News August 29, 2025

விளம்பரத்திற்காக செயல்படும் திமுக அரசு: அன்புமணி

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். நம்பிக்கையுடன் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று என அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இது ஊரை ஏமாற்றும் திட்டம் எனவும், விளம்பரத்திற்காக செயல்படும் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News August 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 443
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

News August 30, 2025

US வரி விதிப்பை எதிர்கொள்வது எப்படி? பியூஸ் கோயல் விளக்கம்

image

அமெரிக்காவின் வரி விதிப்பால், ஏற்றுமதியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதை பரிசீலித்து வருவதாகவும், இதன் மாற்றங்கள் விரைவாக நம்மால் உணர முடியும் எனவும் கூறியுள்ளார். ஏற்றுமதியை பரவலாக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 30, 2025

வாக்குகளை திருடி மோடி வெற்றி பெற்றார்: ராகுல் காட்டம்

image

வாக்கு திருட்டு என்பது அம்பேத்கரின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி சாடியுள்ளார். யாரும் அரசியலமைப்பை அழிக்க விடமாட்டோம் எனவும், மோடி வாக்குகளை திருடியே தேர்தலில் வெற்றி பெற்றார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஏழைகள், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை பறிக்கும் மோடி, பிறகு அம்பானி அதானியுடன் இணைந்து ரேஷன் மற்றும் இதர சலுகைகளையும் பறிப்பார் என குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!