News August 29, 2025
AI புரட்சியில் முதல் புள்ளி வைத்த ரிலையன்ஸ்

AI-க்கான ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்குவதாக <<17553965>>அம்பானி<<>> அறிவித்துள்ளார். அதன்படி, ‘ஜியோ ஃபிரேம்ஸ்’ என்ற AI ஸ்மார்ட் கண்ணாடியை அவர் அறிமுகம் செய்துள்ளார். குரல் கட்டளைக்கு ஏற்ப இந்த கண்ணாடி செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், Jio PC என்ற ஸ்மார்ட் கம்யூட்டர் அமைப்பையும், ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘ரியா’ என்ற குரல் கட்டளைக்கு பதில் அளிக்கும் AI வசதியையும் அறிமுகம் செய்துள்ளார்.
Similar News
News August 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 30, ஆவணி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News August 30, 2025
பாஜகவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தொழில் நகரங்களை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற செப்.2ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
News August 30, 2025
ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த KSR

ரஜினியின் படையப்பா படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் படையப்பா ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமலை இணைந்து படம் ஒன்றை இயக்க தயாராக இருப்பதாக சொல்லி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். ஏற்கெனவே லோகேஷ், ரஜினி – கமலை இணைந்து படம் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. எந்த காம்போ நல்ல இருக்கும்?