News August 29, 2025

விஸ்வநாதன் ஆனந்த் கொடுத்த அட்வைஸ்.. மறக்காத குகேஷ்

image

ஓவர் கான்ஃபிடன்ஸால் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தோற்றதாக குகேஷ் தெரிவித்துள்ளார். பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், தானும் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பில் தோற்றதாகவும், பிறகு கம்பேக் கொடுக்க தனக்கு 11 போட்டிகள் இருந்த நிலையில், உனக்கு தற்போது 13 போட்டிகள் உள்ளது என அட்வைஸ் கொடுத்ததாகவும் குகேஷ் நினைவுகூர்ந்துள்ளார். இந்த அட்வைஸ் தான் சாம்பியன்ஷிப் அடிக்க தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 30, ஆவணி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News August 30, 2025

பாஜகவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

image

மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தொழில் நகரங்களை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற செப்.2ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

News August 30, 2025

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த KSR

image

ரஜினியின் படையப்பா படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் படையப்பா ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமலை இணைந்து படம் ஒன்றை இயக்க தயாராக இருப்பதாக சொல்லி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். ஏற்கெனவே லோகேஷ், ரஜினி – கமலை இணைந்து படம் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. எந்த காம்போ நல்ல இருக்கும்?

error: Content is protected !!